சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ‘சுவாகத்’ என்னும் மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்காக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது.

நிகழ்வை சி.எம்.எஸ் கல்விக்குழும அறக்கட்டளையின் தலைவர் கிரீசன் தொடங்கி வைத்தார். இதில் குழு நடனம், மைமிங், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சஜீஷ் குமார், செயலாளர் சந்திரகுமார், இணை செயலாளர் சஷிதரன், பொருளாளர் விஜயக்குமார்,  சி.எம். ஸ் கல்விக்குழு சிஇஓ சந்தியா மேனன், கல்விசார் துணை தலைவர் சாலினி, நிர்வாகம் துணை தலைவர் சுஜாதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.