கோவை, வடகோவை பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்ட  பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.  செம்மொழி பூங்காவை திறந்து வைக்க நாளை முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி வரவேற்பு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

7 5

இந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை காலை 11 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து செம்மொழிப் பூங்கா வரை முதல்வர் வரும் வழியில் மாபெரும் வரவேற்பு அளிப்பது.

பாஜக ஆளும் மாநிலங்களில் போதிய மக்கள் தொகை இல்லாத இடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிவிட்டு, கோவை மாவட்டத்திற்கு போதுமான மக்கள் தொகை, தேவையான கட்டமைப்பு வசதிகள் இருந்தும் கோவை மக்களை வஞ்சிக்கும் நோக்கோடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் புறக்கணித்த பாஜக அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

8 2

வரும் 27அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது.

வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம் மூலமாக ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த அநீதியான மக்கள் விரோத செயலை இந்த கூட்டம் கண்டிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

3 27

கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக், கழக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

6 7 scaled