உலக பூமி தினத்தை முன்னிட்டு, கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் பிகாம்., பி.ஏ துறையும், கோயம்புத்தூர் வனப்பிரிவு ட்ரீ என் ஜி ஓ மற்றும் பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து மதுக்கரை வன ரயில் சாலையில் தூய்மைப்படுத்தும் பணியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள், வன அதிகாரிகள் மற்றும் என்.ஜி.ஓ ஆர்வலர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். மதுக்கரை வனச்சரக அதிகாரி ஜோதிலிங்கம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வழங்கினார்.அவரது உரையில்,” இந்தக் காடு வெறும் பசுமையான பகுதி மட்டுமல்ல இது ஒரு வாழும் பாரம்பரியம்” என்று அவர் கூறியது வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தை எடுத்துக்காட்டியது.

மேலும், மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றினர். கல்லூரி முதல்வர் கலைவாணி மாணவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுபோன்ற முயற்சிகள் நாளைய பொறுப்புள்ள குடிமக்களை வளர்க்கின்றன என்றும் அவர் கூறினார்.
