கோவை கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் அந்தோணி பெர்னாண்டஸ் ஆண்டறிக்கை வாசித்தார். மேலும், கல்லூரி தாளாளர் ஜான் ஜோசப் ஸ்தனிஸ், ஜெயம் என்ஜினீயரிங் நிறுவன தலைவர் சிவா, கத்தோலிக்க கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக் குவினாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, வளாக நேர்காணலில் வேலை பெற்ற இறுதியாண்டு படித்து வரும் 180 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இறுதியாக துணை முதல்வர் அற்புதசகாயராஜ் நன்றியுரையற்றினார்.