கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கு நெருப்பு இல்லாமல் சமைக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவின் தொடக்கத்தில், கல்லூரி முதல்வர் ஏண்டனி பெர்னான்டஸ் வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அழகி மீனாள், முதுகலை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் துணை தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி கலந்து கொண்டு, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில், ஐ.சி.சி. கமிட்டி தலைவர் மற்றும் கணிப்பொறியியல் துறைத்தலைவர் அமல் தீபா நன்றியுரை வழங்கினார்.