கோயம்புத்தூர் சின்மயா மிஷன் சார்பில், ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற கூட்டு பிரார்த்தனை வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி 15, மஹா சிவராத்திரியன்று நடைபெற உள்ளது.

இதில் காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் கலந்து கொள்ளலாம். உடல் நலன், உள்ளத் தூய்மை, உலக நன்மை ஆகிய நோக்கத்திற்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. இதில் பாராயணம் செய்வது முற்றிலும் இலவசமானது. முன்பதிவு தேவையில்லை.

2 6

ஹோமத்தில் பங்குபெற விரும்புபவர்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும். உங்கள் வசதிக்கேற்ப உங்கள் 45 நிமிடங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

ஹோமத்தில் தனிநபராகவோ அல்லது குழுவாகவோப் பங்குபெற மற்றும் ஹோமத்திற்கான நன்கொடை அளிக்க சின்மயா மிஷன் ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் – 96552 45870 தொடர்பு கொள்ளவும்.

3 3