பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கம், கேரம் போட்டிகள் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டின் பல்வேறு விதமான போட்டிகள் இந்த வருடம் நடக்க இருக்கின்ற நிலையில் முதலாவதாக இந்தப் போட்டிகள் துவங்கியது. விளையாட்டுப் போட்டியினை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனுசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தனர்.

செஸ் போட்டிகள் மாணவர் மற்றும் மாணவியர் பிரிவில் 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும், கேரம் போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவினருக்கும் நடக்கிறது.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி மற்றும் மகாஜன மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களும் செய்தனர்.


