ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தக கல்வி தினம் விழா நிகழ்வில் பங்கேற்ற விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன், கிளினிக்கல் ட்ரையல்ஸ், இயக்குநர் ஜெயகர் உடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார், கல்லூரி முதல்வர் ஸ்ரீராம் உள்ளிட்டோர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தக கல்வி தினம் விழா கொண்டாடப்பட்டது.

‘மருந்தகம் மற்றும் மருந்தியல் பயிற்சியில் தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன், கிளினிக்கல் ட்ரையல்ஸ், இயக்குநர் ஜெயகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருந்து தயாரிப்பு வளர்ச்சிக்கு இன்கியூபேஷன் மையங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மருந்தியல் கல்வியில் தொழில்துறையுடன் இணைந்து முன்னேற்றம் பெற வேண்டியது அவசியம் என கல்லூரி முதல்வர் ஸ்ரீராம் குறிப்பிட்டார். நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார் தலைமை தாங்கினார். மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் புதுமை, ஆராய்ச்சி, மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.