தேசிய பறவை தினத்தை முன்னிட்டு, கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் ‘கேம்ஃபோர்டு விங்கத்தான்’ என்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சாயல் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
மாரத்தானை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் மூத்த விஞ்ஞானி பிரமோத், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஓட்டம் 1.5 கிமீ, 3 கிமீ மற்றும் 5 கிமீ என நடந்தது.

பரிசு வழங்கும் விழாவில் கோவை வருமான வரித்துறையின் உதவி ஆணையர் மாணிக்கராஜ் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கோப்பை, பதக்கங்களை வழங்கினார். அனைத்து பங்கேற்பாளர்களும் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றனர்.
