வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், ராமநாதபுரம் ஜெம் புற்றுநோய் மையத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் வி-சர்வ், வி-வெல்னஸ் மற்றும் வணிகவியல் பள்ளி ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின. இதில், ஜெம் புற்றுநோய் மையத்தின் மார்பகப் படமெடுப்பு மற்றும் தலையீடுகள் ஆலோசகர் டாக்டர் பிரேமா சுப்ரமணியம் பங்கேற்று, மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், உரிய நேரத்தில் பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முகாமில் பொதுமக்கள் 4 பேர், கற்பித்தல் சாரா பணியாளர்கள் 6 பேர் மற்றும் ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் பயனடைந்தனர்.