ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் சார்பில் ‘பெண்ணே விழித்திடு’ என்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி லக்ஷ்மி மில்ஸ் அர்பன் செண்டரில் சனிக்கிழமை (11.10.2025) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி பங்கேற்று சிறப்பித்தார். மருத்துவமனையின் புற்றுநோய் துறை மருத்துவர்கள் மற்றும் அலைடு ஹெல்த் சயின்சஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.