கலைக்கவிஞர் மருதூர் க. கோட்டீஸ்வரனின் “வீரமங்கை ராணி வேலுநாச்சியார்” சரித்திர நாடகம் நூல் வெளியீட்டு விழா, பந்தயச் சாலையில் உள்ள கோவை உற்பத்தித்திறன் குழு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் நூலை வெளியிட, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அதனைப் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, கோவை தமிழ் இலக்கியப்பாசறை தலைவர் கோவை கிருஷ்ணா வரவேற்புரையும், வெள்ளலூர் முத்தமிழ்ச் சங்கம் கவிதாயினி ஆனந்தி, நூல் அறிமுகவுரையும் வழங்கினர். சிபி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் அரங்ககோபால், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
