நூல்கள் வெளியீட்டு விழா கோயமுத்தூர், இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெற்றது. கொங்கு ரத்தினங்கள் என்ற நூலை சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் கொங்கு மாமணிகள் என்ற நூலை குமரகுருபர சுவாமிகள் அவர்களும் வெளியிட்டனர். இந்நூல்களை சக்தி குழுமத்தின் செயல் உறுப்பினர் தரணிபதி ராஜ்குமார் மற்றும் செல்வம் ஏஜென்சி மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் அவர்களும் பெற்றனர். இதில் நூலாசிரியர் கார்வேந்தன், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர் .