தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பி.என்.ஐ (BNI) ரிதம் சேப்டர்  5ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ள ரிதம் சேப்டர், இதுவரை 12,000க்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது.

இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மூலம் 6,582 உறுதிப்படுத்தப்பட்ட வணிக பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக ரூ.7,52,64,647 மதிப்புள்ள வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ரூ.2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

bni 2

எதிர்கால நோக்கமாக ரிதம் சேப்டர் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட வணிக மதிப்பை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. பி.என்.ஐ ரிதம் சேப்டரின் தலைவர் பிரவீன் குமார், நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் சாமி, செயலாளர் & பொருளாளர் செல்வி விஜய், நிர்வாகிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

bni 3