பி.என்.ஐ பிரீமியர் லீக் சீசன் 5வது கிரிக்கெட் போட்டியில் ரிதம் அணி 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பி.என்.ஐ பிரீமியர் லீக் சீசன் போட்டி வருடத்திற்கு ஒருமுறை கோவையிலுள்ள தொழிலதிபர்களுக்காக நடத்தப்படுகிறது. 8 ஒவர் 8 பேர் மட்டுமே பங்குபெறும் போட்டியில், ரிதம் சாப்டர்ஸ் சார்பாக 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணி இடம் பெற்றது.

போட்டிகளில் மொத்தம் 28 அணிகள் பங்கு பெற்றன. கோவையில் உள்ள நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன. சங்கரா கல்லூரியில் நடைபெற்ற மீதமுள்ள போட்டிகளில் பங்கு பெற்று, ரிதம் சாப்டர்ஸ் 2ம் இடம் பிடித்தது. வீரர்களுக்கு மெடல், கோப்பை வழங்கப்பட்டது.

bni

கேப்டன் கார்த்திக் பாலசுப்ரமணியம் கூறுகையில், 28 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் 2ம் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்காக ஸ்பான்ஸோர் செய்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.