எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனத்தின் இளைஞர் ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் டாட்ரி – ரத்த ஸ்டெம் செல் தானதாரர் பதிவேடு நிறுவனம் இணைந்து 3 நாட்கள் ரத்த ஸ்டெம் செல் தானதாரர் பதிவு முகாமை  ஏற்பாடு செய்தது.

இதில் ரத்த ஸ்டெம் செல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டது.  மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களைத் தானதாரர்களாக பதிவு செய்துகொண்டனர். மொத்தம் 4093 பதிவுகள் பெறப்பட்டன. இது, லூகேமியா மற்றும் தலசீமியா போன்ற உயிர்க்கு ஆபத்தான ரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பதில் பங்களிக்கும் விதமாக அமைந்தது.