குமரகுரு கல்லூரி வளாகத்தில் ‘என்றென்றும் ஜமக்காளம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வணவராயர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் கட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் கலந்துகொண்டு, ஸ்டுடியோ ஏ நிறுவனர் அமர் ரமேஷ் எழுதிய, ‘பவானி ஜமுக்காளம்’ என்ற நூலை வெளியிட்டார். புது தில்லி, ஜவுளித் துறை திறன் கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வப்னா மிஸ்ரா நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

பவானி பகுதியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய கைநெசவு ஜமுக்காளங்களின் தனித்துவம், மரபு மற்றும் கலை நுணுக்கத்தை கொண்டாடும் வகையில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
