தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான 5வது மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது.

நிகழ்வினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலிருந்து பல்வேறு பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன.

இதில் கோவை மாவட்டம் பாரதீய வித்யா பவன் பள்ளி மாணவர்கள் பவின், ஆதர்ஷ் ஆகியோர் இளையோருக்கான டென்னிஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் நாக சுப்பிரமணியம், முதல்வர் மகேஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாகம் வாழ்த்தினர்.