கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் பாரதி பாசறை சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முனைவர் மானசீகன் கலந்துகொண்டார்.
மேலும் கோவை பாரதி பாசறை தலைவர் மோகன் சங்கர், பாரதி பாசறை செயலர் ஜான் பீட்டர் மற்றும் நிர்மலா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு பாரதியின் கருத்துகளை எடுத்துரைத்தனர். கல்லூரியின் செயலர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி மேரிபபியோலா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

