கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கோ-கோ விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட கோ-கோ விளையாட்டு அமைப்பு சார்பில் இந்திய அளவில் நடைபெறும் சர்வதேச ஜூனியர் கோகோ விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஏழை எளிய விளையாட்டு வீரர்கள் கோவையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் பயிற்சி கால தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்காக போராடி வரும் சூழ்நிலையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ரூபாய்.5000ம் காசோலையை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.கெளரி சங்கர் பயிற்சியாளர்கள் சிவக்குமார்,வெங்கடேஷ் முன்னிலையில் வழங்கினார்.