கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காவல் துறை சார்பில் சிறார்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன.