இரத்தினவாணி சார்பில் முதியோரின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு
இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 மற்றும் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசின் சமுதாய வானொலி சங்கங்கள் இணைந்து மத்திய அரசின் அடல் வயோ அபியுதாய் யோஜனா திட்டம் பற்றி மூத்த குடிமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக “மூத்தோருக்கு முதல் வணக்கம் ” என்ற தொடர் நிகழ்ச்சியினை இரத்தினவாணி சமுதாய வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய , மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான அரசின் திட்டங்கள், முதியோரின் நல்வாழ்வுக்கான வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் நாடக வடிவில் பல்சுவை நிகழ்ச்சியாகத் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கோயம்புத்தூர் ஈச்சனாரி, சுந்தராபுரம், போத்தனுர், மதுக்கரை போன்ற பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் அரசுத்திட்டங்கள் மற்றும் முதியோரின் நல்வாழ்வு பற்றிய கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பு பணியில் இரத்தினவாணி நிலைய இயக்குநர் ஜெ.மகேந்திரன் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி காட்சி தொடர்பியல் துறைத்தலைவர் சதீஷ் ஆனந்தன் , உதவிப் பேராசிரியர் ஆத்ரேயா, மாணவ, மாணவிகள் மேற்கொண்டனர்.