வேலூரில் சன்லைட் கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வி பணியில் தமிழகத்தில் தலைசிறந்த சேவையாற்றி வரும் சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கோவையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்விச்சேவை புரிந்து வரும் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கருக்கு சன்லைட் கல்வித் தலைமை விருது வழங்கப்பட்டது. விருதினை திரைப்பட நடிகர் ஜிவா ரவி, காமெடி நடிகர் மதுரை முத்து, சன்லைட் கல்வி  நிறுவனத்தின் நிறுவனர் அருண்குமார் வழங்கினர்.