சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் சிறந்த இளம் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், ஜீ டி வெய்லர் நிர்வாக இயக்குனர் ராஜ்குமாருக்கு விருதினை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் ராஜ்குமார் பேசுகையில்: வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் படி நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர் பேசும்பொழுது கவனித்து கேட்க வேண்டும். அவர்களிடமிருந்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்,
தகவல் தொடர்பு திறன் இன்றியமையாதது. நிர்வாகம் சரியாக நடக்க வேண்டுமானால் ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டும். இவை இருந்தாலே மனிதவள மேம்பாட்டாளர் ஆகும் தகுதி தானாகவே வந்து விடும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அளவாக பளன்படுத்த வேண்டும். பொன்னான நேரத்தை அதில் செலவிட்டு வாழ்கையின் வெற்றியை விட்டு வடாதீர்கள் என கூறினார்.
நிகழ்வில் சக்தி குழுமம் தலைவர் மாணிக்கம், கே.சி.டி நிறுவனம் தலைவர் சங்கர் வாணவராயர், கல்லூரியின் இயக்குனர் (பொ) சர்மிளா, செயலாளர் பாலசுகப்பிரமணியம், ரூட்ஸ் குரூப் ஆப் கம்பணிஸ் இணை நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் முதல்வர் மாணிக்கசெழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
