தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்த இரண்டு நாள் பயிற்சி, வரும் அக். 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ், பிசிபேளாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குலோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட தயார்நிலை உணவுப் பொருட்களைத் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இத்தொகையைப் பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு: 94885 18268.
