கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கார்த்திகைக்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பேசினார். கல்லூரியில் நடைபெற்ற ப்ராஜெக்ட் எக்ஸ்போவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் சோபியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
