இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி, கலாசாரம் மற்றும் சர்வதேசக் கல்வி, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து அறிமுகப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய மொழி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் நடராஜன் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜிங்லாங் எடு டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இன்றைய உலகளாவிய சூழலில் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. பாடத்திட்டக் கல்வியுடன் பிற கலாசாரங்களைப் புரிந்துகொள்வதும், மொழித் திறன்களை வளர்த்துக்கொள்வதும், சர்வதேச வாய்ப்புகளை அறிந்துகொள்வதும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என வலியுறுத்தப்பட்டது.
