கோவை அஜ்ஜனூர், பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை மற்றும் சுயசார்பு போன்ற காலத்தால் அழியாத கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவாற்றினர்.

12. a scaled

பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர், காந்தியடிகளின் உயரிய கருத்துக்களை மாணவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி ஒழுக வேண்டும் என்றும், நேர்மை, ஒழுக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். தொடர்ந்து, மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.