கோவை புலியகுளம் கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளருமான ஆரோக்கிய ததேயூஸ் அடிகளாருக்கு, தமிழக அரசின் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு ஜான் ஜோசப் தானிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளருமான நந்தகுமார், நல்லாசிரியர் ஜோ.தன்ராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
