இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கோவை இணைந்து புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்வில் காணொளி வாயிலாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக புகையிலை இல்லாத வாழ்க்கை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் சிறப்பம்சமாக, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட 2,500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் புகையிலை இல்லாத உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
