டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி, செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் நளின் தலைமை தாங்கினர்.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் பயோ மற்றும் இன்போர்மேஷன் துறையின் தலைவர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டுடென்ட்-2026 என்ற பட்டத்தோடு தங்கப் பதக்கத்தை 3ம் ஆண்டு மாணவன் விபின் ராஜ், வெள்ளி பதக்கத்தை 3ம் ஆண்டு மாணவி அபிநயா, வெண்கலப்  பதக்கத்தை 3ம் ஆண்டு மாணவன் ரிச்சர்ட் பெற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கே.பி.ஓய் பாலா, வினோத் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார், முதன்மை அதிகாரி டேனியல், கல்வியாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு விழா

தொடர்ந்து கல்லூரியின் விளையாட்டு விழாவும் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி, செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் நளின் தலைமை தாங்கினர்.

கல்லூரியின் முதல்வர் அனிதா, முதன்மை அதிகாரி டேனியல், கல்லூரியின் துணை முதல்வர் நரேஷ் குமார்,   கல்வியாளர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுத் துறை இயக்குநர் அருண்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.