ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 43வது ஆண்டு விழா, எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில்  நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். துணை தலைவர் நரேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கீதா லட்சுமி பங்கேற்றார். பள்ளியின் முதல்வர் டயானா ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.