பேரறிஞர் பெருந்தகை அண்ணா 56 ஆவது நினைவு நாளில் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில்  மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து – பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மற்றும் வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள்‌, துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA – 2 பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.