வருங்கால ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைகழகம், வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக, தொழில் துறையினில் அவர்களை நன்கு தயார்ப்படுத்துவதை இந்த முயற்சியானது உறுதி செய்கின்றது.
இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து, அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் கல்வி மற்றும் தொழில் துறை கூட்டாண்மையின் இயக்குநர் சுரேஷ் கோடூர் கூறுகையில், இந்த ஒப்பந்தமானது கல்விசார் சிறப்பை தொழில்துறை பொருத்தத்துaடன் ஒருங்கிணைப்பதில் அம்ரிதாவின் பல்கலையின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. உலகப் புகழ்பெற்ற வோல்வோ குழுவுடன் இணைந்து பணியாற்றுவது, எங்கள் மாணவர்களின் தொழில்துறை திறன்களை மேலும் ஆழமாக்குவது மட்டுமல்லாது வாகனத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகுக்கின்றது.
இந்த ஒத்துழைப்பு மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாது ஆராய்ச்சி சார்ந்த கல்வியையும் ஆதரிக்கின்றது.
மேலும், வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கமல் பாலி கூறுகையில், “இந்த ஒப்பந்தமானது, கல்வி மற்றும் தொழில்துறையை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அமிர்தா போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் கால தலைமுறையின் பொறியாளர்களைத் தயார்ப்படுத்த உதவுகின்றது. இம்முயற்சியானது வாகனத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.”