கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “அலும்னி ஹோம்கம்மிங் 2025” என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. கல்லூரி தொடங்கியது முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
கே.பி.ஆர் கல்லூரியில் படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென்று கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி கூறினார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நடனம், மற்றும் மிமிக்கிரி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, வரும் ஆண்டுகளில் சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வாக பத்தாண்டுகள் நிறைவடைந்த முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், முதல்வர் சரவணன், துணை முதல்வர், மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தினர்.
