கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. கல்லூரி தொடங்கியது முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த 1,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கே.பி.ஆர். குழும தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

முன்னாள் மாணவர்களின் இசை, நடனம், மிமிக்கிரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பாடகர்கள் பங்கேற்ற சிறப்பு இசைக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.