சச்சிதானந்த ஜோதிநிகேதன் பன்னாட்டு பள்ளி, அகில இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் எட்டு மண்டலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள பாட்டியா K.I.I.T. இன்டர்நேஷனல் பள்ளியில் அக்டோபர் 9 முதல் 17 வரை நடைபெற்றன.

தென் மண்டலம்-1 அளவில் முதலிடம் பிடித்த சச்சிதானந்த ஜோதிநிகேதன் பள்ளி, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, அரையிறுதியில் கர்நாடகா ட்ரீம் வேர்ல்டு பள்ளியை வென்றது. ஆனால், இறுதிப்போட்டியில் ஹரியானாவின் சோனிபட் லிட்டில் ஏஞ்சல் பள்ளியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவியருக்கு K.I.I.T. இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் டாக்டர் மோனாலிசா பல், பள்ளி இயக்குநர் டாக்டர் சஞ்சய் சௌர், பள்ளி செயலர் சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசன் ஆகியோர் கோப்பையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
மேலும், இவ்வணியை பள்ளி நிர்வாக அறங்காவலர் கே. ராமசாமி கோவை விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்று வாழ்த்தினார். பள்ளி முதல்வர் டாக்டர் இரா. உமாமகேஸ்வரி, உடற்கல்வித் துறை துணை இயக்குநர் டி.பி. அனிதா, ஹாக்கி பயிற்சியாளர் யோகானந், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அணியை பாராட்டினர்.


