மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை செய்து வருகிறது.இதனால் சோலையார், ஆழியார்,பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து வரும் தண்ணீர் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடி எட்டியது இதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,225 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.
அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.