கோவை அத்திபாளையம் சாலையில் உள்ள கார்த்திகேயா என்.ஆர்.ஐ பார்க் பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் தேங்கும் போது, அதை யாரோ சிலர் தொடர்ந்து தீவைத்து அழித்துவருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

4 8

வழக்கமான குப்பைகளுடன் பிளாஸ்டிக் குப்பைகளும் எரிக்கப்படுவதால், அதிக அளவில் கரும்புகை வெளியேறுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசும், பொதுமக்கள் ஆரோகியமும் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், குப்பைகளை சாலையோரம் வீசுவது யார்,  தீ வைப்பது யார் என்பதை கண்டறிய கண்காணிப்பு நடவடிக்கை தேவை எனவும், அங்கு குப்பைகள் தேங்காமல் இருக்க அவை தினசரி அகற்றிடும் படி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.