மேட்டுப்பாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் சின்னராசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்கான வளர்ச்சியை அதிமுக ஆட்சி வழங்கியுள்ளது. ஏராளமான பாலங்கள், ஏராளமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைந்த உடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். இதில் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அதிமுகவினரே வெற்றி பெற்று அமர்வார்கள் என்று கூறினார்.