எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் இணைந்து அக்ரி டெக் 4.0 என்ற நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. நவீன பாசனம், ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற நவீன வேளாண்மை முறைகளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் தலைவர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதல்வர் செந்தூர்பாண்டியன், துணை முதல்வர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்வை தோட்டக்கலை இணை இயக்குநர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைப் பேராசிரியர்கள் கார்த்திகேயன், ஜான்சன் ஆகியோர் நவீன பாசனம், நீர் மேலாண்மை மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். 2ம் நாளில் வயர்லெஸ் பாசன தொழில்நுட்பம், 3ம் நாளில் வேளாண்மையில் ட்ரோன் பயன்பாடு, நேரடி விளக்கக்காட்சி மற்றும் வருங்காலப் போக்குகள் குறித்து விளக்கப்பட்டது.