Fகே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படை மெடிக்கல் கம்பெனி பிரிவைச் சேர்ந்த மாணவர் பிரகதீஸ், ஆக்ராவில் உள்ள ஏர்போர்ன் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற உயர்மட்ட விமானப்படை சிறப்பு பயிற்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் மண்டலத்தின் கோவை குழுமம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அவர், மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்த கடினமான பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதில் உடற்பயிற்சி, தரைப் பயிற்சிகள், பாரசூட் கையாளுதல், விமான நடைமுறைகள், நேரடிப் பறக்கும் பயிற்சி மற்றும் விமானத்திலிருந்து பாரசூட்டில் கீழே குதிக்கும் (Actual Para Jump) போன்ற மிகக் கடினமான பயிற்சிகள் இடம்பெற்றன.
இந்த உயர்மட்டப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, சான்றிதழ் பெற்ற மாணவர் பிரகதீஸ்ஸை, கோவை மண்டல என்.சி.சி அலுவலர்கள், கல்லூரியின் என்.சி.சி அதிகாரி, கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.
