வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆச்சார்யா விருது வழங்கும் விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
வி.எல்.பி. ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சூர்யகுமார் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்டத்தின் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் செண்பகலட்சுமி கலந்துகொண்டு பேசுகையில்: மாணவர்கள் விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் சிறந்து விளங்க வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரை சிறந்த மனிதனாகவும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து ஆசிரியர் சேவைக்காக 160 கல்வியாளர்களுக்கு ஆச்சார்யா விருது வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், கல்லூரியின் முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா, ஒருங்கிணைப்பாளர் லதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
