மாருதி சுசுகி சார்பில் சமீபத்தில் விக்டோரிஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விக்டோரிஸ் கார் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி சாலையில் இருந்து, ஆர்.எஸ்.புரம் சாலை வரை கார்கள் மெதுவாக வலம் வந்தது.

இதில் இந்த கார் பற்றிய சிறப்பு அம்சங்கள் மக்களிடம் பகிரப்பட்டது. மேலும் கார் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மாருதி சுசுகி கோவை ஏரியா மேனேஜர் சுபாஷ் தொடங்கி வைத்தார். இதில் கோவையில் உள்ள மாருதி சுசுகி டீலர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக கார்கள் சக்தி சாலைக்கு வரும்போது ஆதி மாருதியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் ஆதி மாருதியின் பொது மேலாளர் கார்த்திகேயன், விற்பனை மேலாளர் சந்தோஷ், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பிஎன் கேப், ஜிஎன் கேப் பாதுகாப்பு தரவரிசையில் 5 ஸ்டார்கள் பெற்றுள்ளது. ஸ்டீயரிங் மற்றும் பிரேக்கிங் இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் வகையிலான அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் உள்ளது. இந்த காரின் ஷோரூம் ஆரம்ப விலை ரூ.10.49 லட்சம் ஆகும்.