தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், மருத்துவமனை செவிலியர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். எஸ்.என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சந்தர், காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சிற்றரசன், ஆகியோர் இணைந்து அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.