கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை, தொல்காப்பியர் தமிழாய்வு மையம் மற்றும் கிருஷ்ணவேணி கவிதாசன் அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சுகன்யா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் பி.பீ. ஹாரத்தி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கிருஷ்ணவேணி கவிதாசன் அறக்கட்டளையின் நிறுவனர், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் தலைமையுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் விமலா, மகளிர் திறன் மேம்பாடு – முன்னேற்றப்பாதை எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் அறக்கட்டளைப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நிகழ்வின் நிறைவில் தொல்காப்பியர் தமிழாய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா, உதவிப் பேராசிரியர், நன்றியுரை வழங்கினார்.