இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உடற்கல்வி துறை சார்பாக விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் துவங்கியது.

இப்போட்டியில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்
ஆர்வத்துடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது விளையாட்டுப் திறமைகளை வெளிப்படுத்தினர்.

2 29

கேரம், சதுரங்கம், த்ரோபால், டேபில்டென்னிஸ், லக்கி கார்னர், கயிறு இழுக்கும் போட்டி, இறகுப்பந்து, கிரிக்கெட், வேக நடைபோட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.

இவ்விளையாட்டுப் போட்டிகளை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் சரசுவதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்தார்.