கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுரியின் வேளாண் பொறியியல் துறையினரால் மூலிகைத் தோட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக ராமலிங்கம் ஐ.ஆர்.எஸ். கலந்து கொண்டார். இவ்விழாவில் 20 வகையான மூலிகைத் தாவரங்கள் நடப்பட்டன. மாணவர்கள் மத்தியில் மூலிகைத் தாவரங்களின் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் உடல் நலத்திற்கு மூலிகைச் செடிகளின் பங்களிப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.
இதில், கல்லுரியின் நிறுவன தலைவர் பொங்கலூர் என் பழனிச்சாமி, துணை நிறுவனர் இந்து முருகேசன், முதல்வர் ரமேஷ், புல முதன்மையர் இராமசாமி, துறை தலைவர் சம்பத்குமார், துறைப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வேளாண் துறை மாணவர்களும் பிற துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.