கோயம்புத்தூர் விழாவின் 17வது பதிப்பை முன்னிட்டு கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் க்ரூவ் கமி நிறுவனம் தயாரித்துள்ள “ரிதம் ஆஃப் கோயம்புத்தூர்” புதிய பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
புரோசோன் மாலில் பொதுமக்களுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட பிரமாண்டமான வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சத்யராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நவம்பர் 23 ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் விழா தொடங்கவுள்ளது. விழா குறித்த நிகழ்வுகள் அட்டவணையை www.coimbatorevizha.theticket9.com எனும் இணையதளத்தில் நேரலையில் உள்ளது. மேலும் தகவலுக்கு, +91 9600574888 என்ற எண்ணெய் தொடர்பு கொள்ளவும்.