கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி மற்றும் தொழில்சார் சிகிச்சை கல்லூரிகளில் 2026-2027ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவினை கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன், தலைமை இயக்க அலுவலர் நட்டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி மற்றும் தொழில்சார் சிகிச்சை கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
